மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் ‘புதிய கோப்பையில் பழைய மது’ –கூட்டமைப்பு கண்டனம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை புதிய கோப்பையில் பழைய மது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.

அடுத்த ஆண்டிலும் பாதுகாப்புக்கே அதிக நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சுக்கு பெரும் வெட்டு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகராகிறது பிரித்தானியாவின் கிங்ஸ்டன்

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் விக்னேஸ்வரன் தலையிட முடியாது- ரணில்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எந்த முதலமைச்சராலும், தலையீடு செய்ய முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து சென்றார் சிறிலங்கா அதிபர்

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சென்றடைந்தார்.

விக்கியின் குற்றச்சாட்டு – விசாரணை நடத்தக் கோருவது குறித்து கூட்டமைப்பு ஆலோசனை

தன்னைக் கொலை செய்வதற்கு சிறிலங்காவின் தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா அதிபரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து கூட்டமைப்பு அச்சம்

புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எந்த சமஷ்டி முறையை உருவாக்கவும் விடமாட்டோம் – சிறிலங்கா அமைச்சர்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்காது என்று, சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி

சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.