மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

எழுக தமிழ் பேரணியால் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

புலிகள் மீதான தடை குறித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு – கவலையில் சிறிலங்கா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஓமல்பே சோபித தேரர்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஓமல்பே சோபித தேரர் நேற்று அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தா அறிவிப்பு

அடுத்து நடக்கவுள்ள எந்தவொரு அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மான நடைமுறைப்படுத்தல் – மங்களவுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன்  பிரித்தானியா நாடாளுமன்றத்தின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அலோக் சர்மா, பேச்சு நடத்தியுள்ளார்.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒபாமாவின் விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.

பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தை பான் கீ மூனிடம் கையளித்தார் சிறிலங்கா அதிபர்

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

போர் பற்றிய தெளிவான படத்தை தனது நூல் வெளிப்படுத்துமாம் – சரத் பொன்சேகா கூறுகிறார்

தாம் விரைவில் வெளியிடவுள்ள நூல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான தெளிவான படத்தை வழங்கும் என்று, சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.