மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவ ஜப்பான் இணக்கம்

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது படங்களைப் பயன்படுத்தும் உரிமை பொதுஜன முன்னணிக்கே – என்கிறார் மகிந்த

தமது படங்களை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் உரிமை சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரமே இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தன் குணமடைகிறார் – இந்தியப் பயணமும் ரத்து

உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் தேவைகளை அறியும் குழுவை அனுப்புகிறார் மலேசியப் பிரதமர்

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள தேவைகள்  குறித்து ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தமது நாட்டின் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர்  அப்துல் நஜீப் ரசாக் உறுதியளித்துள்ளார்.

மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட இணக்கம்

மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.