மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

மற்றொரு அமெரிக்க உயர் அதிகாரியுடனும் சுமந்திரன் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது.

மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை

வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள்

கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல்

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் நேற்று ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் மாத்திரமே இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் முப்படையினரும் குவிப்பு – இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமனம்

கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில் நேற்றைய வன்முறைகளில் பலர் பலி? – கைக்குண்டும் வெடித்தது

கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.