மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது – ஐதேகவை எச்சரித்த சிறிலங்கா அதிபர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது

நம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது.

கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவ முன்வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – உறுப்பினரை நீக்க முடிவு?

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 2இல் கூட்டமைப்பின் முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் நாளே முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி

அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்ட சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான, மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளது.

நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும்,  பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ரணிலைப் பதவி நீக்க 113 வாக்குகள் தேவையா?

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று மூத்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்

ஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.