சம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.
கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.
யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அடுத்த மாதம் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை சிறிலங்கா அசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.