மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மூவர் ஆளும்கட்சிக்கு தாவினர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன்  இணைந்து கொண்டுள்ளனர்.

திரிசங்கு நிலையில் மகிந்த – மொட்டு கட்சியிலும் இல்லையாம்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியில் இருந்து மைத்திரி விலக வேண்டும் – குமார வெல்கம

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பதவிக்கு மங்கள – ரவி கயிறிழுப்பு

புதிய அமைச்சரவை நியமனம் தாமதமடைந்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி தொடர்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்

தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம் சிறிலங்கா அதிபர் மற்றும் சீனத் தூதுவரால், சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பிடம் ‘றிமோட் கொன்ரோல்’ – சிறப்பு அறிக்கையில் மகிந்த சீற்றம்

நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐதேகவை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார், மகிந்த ராஜபக்ச.

புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு

சிறிலங்காவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி?- சமந்தா பவர் கூறும் காரணம்

சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.