3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்
ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிரந்தரமான அமெரிக்க தளத்தை அமைப்பது தொடர்பான எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் தமது திட்டங்கள் மற்றும் நிலைகளுக்கான பாதுகாப்பை வழங்குமாறு சீன, இந்திய அரசாங்கங்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.