மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஆட்சிக்கு வந்தவுடன் சிறையிலுள்ள படையினரை விடுவிப்பேன் – கோத்தா வாக்குறுதி

தாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக, தற்போதைய அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து படையினரையும் விடுதலை செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச.

வேட்பாளர்களுக்கு 4 நிபந்தனைகள் – சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நான்கு முக்கியமான விடயங்கள் தொடர்பான சத்தியக் கடதாசியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

‘மக்கள் மேடை’யில் இருந்து ஓடி ஒளிந்த கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை ஒரே மேடையில் – பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மேடை எனப்படும், விவாத நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.

யாழ். அனைத்துலக விமான நிலையம் – 17ஆம் நாள் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17ஆம் நாள் விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை – சஜித்

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை என்றும் என்றும்  ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேரடி விவாதத்துக்கு இணங்காத கோத்தா – சஜித், அனுர இணக்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அறியும், நேரடி விவாத நிகழ்வு வரும் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க உயர்மட்டக் குழு மகிந்தவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

முடிவை மறுபரிசீலனை செய்கிறதாம் ஐ.நா – சிறிலங்கா இராணுவத் தளபதி கூறுகிறார்

ஐ.நா அமைதிப்படையில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் முடிவு தொடர்பாக, ஐ.நா மறுபரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா மரைன் படையினரின் கூட்டுப் பயிற்சி நிறைவு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து,  இருதரப்பு மருத்துவ பரிமாற்ற பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

போர்க்குற்றவாளிகளை தண்டிப்போம் – சம்பிக்க ரணவக்க

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்ததை ஒரு போர்க்குற்றமாகவே கருத வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.