மகிந்தவின் தோல்வி தெற்காசியாவின் வியத்தகு மாற்றம் – என்கிறது அமெரிக்கா
சிறிலங்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் சக்திவாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை, தெற்காசியாவில் வியத்தகு களத்தை திறந்து விட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் சக்திவாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமை, தெற்காசியாவில் வியத்தகு களத்தை திறந்து விட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாடுகளின் விதிமுறைகளை மீளாய்வு செய்யத் தயாராக இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் குடும்பத்துடன் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தொடங்கஸ்லந்தை பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில், தேர்தல் நாளன்று இரவு முழுவதும், ஒளிந்திருந்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட, விசாரணை அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் உறவினரும், ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, உக்ரேனிய பிரிவினைவாத போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்டது, சிறிலங்கா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக பின்னடைவே என்று சீனா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு அளிக்கும் விழா நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வை மேற்கு நாடுகளின் தூதுவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.