மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானொலி

சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்படுவோர் மீது நடவடிக்கை – சம்பந்தன்

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் பாரிய கட்சித் தாவல்?

சிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – புதுடெல்லி ஆய்வாளர்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவை புதுடெல்லி கூர்ந்து அவதானித்து வருவதாக, புதுடெல்லியை சேர்ந்த மூலோபாய விவகார ஆய்வாளர் நிதின் ஏ கோகலே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் மேடைகளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள “திரு.பிரபாகரன்”

யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி

சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மர்மப் பயணம் மேற்கொள்ளும் சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு தடைவிதித்தது சிறிலங்கா

சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியைத் தோற்கடிக்க குமார் குணரத்தினத்துக்கு கதவைத் திறந்தது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட, குமார் குணரத்தினத்தை மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வருவதற்கு,  அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது.