மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அம்பாந்தோட்டையில் பணயம் வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பல் கடற்படையினரால் விடுவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தற்காலிகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஜப்பானிய கப்பல், நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டு, ஆழ்கடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

அம்பாந்தோட்டையில் 7000 கார்களுடன் ஜப்பானிய கப்பல் பணயம் – சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கை இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது.

சிசிர மென்டிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடருக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறித்து, ஐ.நா நிபுணர் குழு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுப் போர்க்கப்பல்களை குறிவைக்கிறது திருகோணமலை துறைமுகம்

வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன  தெரிவித்துள்ளார்.

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

சீனாவுக்கு மகிந்த விடுத்த எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வுபெற்றார்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார்.

கட்டுநாயக்கவில் சீனாவின் உதவியுடன் விமானங்களைப் புதுப்பிக்கும் அலகு

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில், சீனாவின் உதவியுடன் விமானங்களை புதுப்பிக்கும் அலகு ஒன்றை சிறிலங்கா விமானப்படை புதிதாக உருவாக்கியுள்ளது.