மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் – சிறிலங்கா அரசு அனுமதி

காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

குறிபார்த்துச் சுடும் சீனர் கொழும்பில் கைது – முக்கிய பிரமுகரை கொல்லும் சதித் திட்டம்?

குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி – தேஜஸ் போர் விமானங்களை ஆய்வு செய்வார்?

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் – சிவ்சங்கர் மேனன்

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்

அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரனை அழிப்பதற்காக இந்திய அரசுடன் இணைந்திருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் – சிவ்சங்கர் மேனன்

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த  நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஆறு பயிற்சி விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படைக்கு,  பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.

சிறிலங்காவில் சீன இராணுவ உயர் அதிகாரிகள் குழு

சீன படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.