மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது

இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை

மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.

மகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வனாட்டு தீவில் சிறிலங்கா மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய கப்பல் தடுத்து வைப்பு

பசுபிக் தீவான வனாட்டுவில் சிறிலங்காவைச் சேர்ந்த மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய எம்.வி.குளோரி (MV Glory) என்ற பெயர் கொண்ட மீன்பிடிக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயலணியின் அறிக்கையை பெறுவதில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ளாமல் நழுவியுள்ளார்.

ஹொரவபொத்தானையில் கலகம் செய்த 16 சிறிலங்கா படையினர் கைது

ஹொரவபொத்தானை நகரில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

ஆப்கானுக்கான சிறிலங்கா தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளார்.

எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.