மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது – சமந்தா பவர்

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர் – வடமாகாண ஆளுனர், முதல்வருடன் பேச்சு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில் வடக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு காலமானார்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளரான எஸ்.கதிரவேலு நேற்று, தனது 83ஆவது வயதில் அகால மரணமானார்.

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் – கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு கிழக்கில், நாளை மறுநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாகவே விடுவிக்கப்படுவர் – விஜேதாச ராஜபக்ச

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரேயடியாகப் பொது மன்னிப்பு அளிக்கப்படாது என்றும், அவர்கள் கட்டம் கட்டமாகவே விடுவிக்கப்படுவர் என்றும், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்து வைக்கும் புதிய சிறைச்சாலை

ஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகம்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாயில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலத்தை கடலுக்கு விட 8 மணி நேரம் போராட்டம்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.

வடக்கு மாகாணசபைக்கு நேரடி உதவி வழங்க முடியாது – அமெரிக்க உயர்அதிகாரி கைவிரிப்பு

வடக்கு  மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கிற்கு வழங்கவிருந்த கூடுதல் அதிகாரங்களை ஜே.ஆரே நீக்கினார் – ப.சிதம்பரம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான, ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

விதைக்கப்பட்டது தமிழினியின் வித்துடல்

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.