மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

இந்திய வீடமைப்புத் திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார் கிளிநொச்சி பங்குத் தந்தை

இந்திய வீடமைப்புத் திட்ட உதவிகளைப் பெறுவதில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக, தாம் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை கடிதங்களை அனுப்பியதாக, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஐ.நா வின் சர்ச்சைக்குரிய ‘சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி’ – முதலமைச்சர் விளக்கம்

ஐ.நாவின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி தொடர்பாக, வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி்விக்னேஸ்வரன் இன்று அவையில் அளித்த விரிவான பதில்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் 4 சிறிலங்கா படையினருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் சிறிலங்காவுக்கு இன்று எதிரிகள் இல்லை – கிளிநொச்சியில் மைத்திரி பெருமிதம்

சிறிலங்காவுக்கு இன்று உலகில் எதிரிகளும் இல்லை, சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் சிறிலங்கா படையினர் வசம் இருந்த 576 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 576 ஏக்கர் தனியார் காணிகள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈனச்செயல்களே சிறிலங்கா அரசை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்

எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

தமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும்  என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக பொறிமுறை – வட மாகாணசபையில் தீர்மானம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டுள்ளது.