இந்திய பாதுகாப்பு அமைச்சர், தளபதிகளுடன் சிறிலங்கா கூட்டுப் படைத் தளபதி பேச்சு
நான்கு நாள் பயணமாக, இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் இந்திய விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.



