மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இருந்து வெளியேறுகிறது இந்திய நிறுவனம்
மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.
மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.
இந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறுவதற்கு, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், புதுடெல்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு கடும் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தை, திருகோணமலை துறைமுக நுழைவாயில் பகுதியான பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றுமாறு இந்தியாவிடம், சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக கல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது.
தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.