சம்பிக்க, கம்மன்பில அமைச்சர் பதவிகளைத் துறப்பு – அரசில் இருந்து விலகியது ஹெல உறுமய
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ எந்தப் பேச்சுக்களையும் வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜாதிக ஹெல உறுமய தாம் முக்கிய முடிவென்றை எடுத்துள்ளதாகவும், அதுபற்றி இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் 25 நிர்வாக மாவட்டங்களையும் சித்திரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயக்குற்றிகள் இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எழுத்து மூலமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகள், நிபுணத்துவம் வாய்ந்ததாக இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட எழுதிய அதிஸ்டானய (விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில், கடற்படையின் பங்கு) என்ற நூல் இன்று காலை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா – வெளியேறுவதா என்பதை முடிவு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.