ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.







