மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ரிசாத் பதியுதீன் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஆதரவு வழங்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சரின் குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் நிராகரிப்பு

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் இலஞ்சம் தர முயன்றார் – சிறிலங்கா அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் இருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் பரப்புரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு

சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இருந்து தப்பிக்க சிறிலங்கா முயற்சி

சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதை தடை செய்யப் போவதாக, ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்துப் பேசுவதற்காக, சிறிலங்கா அமைச்சர் சரத் அமுனுகம பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.

எரிபொருள்களின் விலை திடீரென குறைப்பு – மகிந்தவின் அடுத்த தேர்தல் குண்டு

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை, சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

முக்காற் பங்கு போரை வென்றது நானே – மார்தட்டுகிறார் சந்திரிகா

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரின் முக்காற் பங்கைத் தானே வெற்றி கொண்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்க அமீர் அலி முடிவு – மகிந்தவின் வலையில் வீழ்ந்தார் ரிசாத்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.

பந்துல குணவர்த்தன எதிரணிக்கு தாவலாம்? – திடீரென வெளிநாடு சென்றதால் ஆளும்கட்சி அதிர்ச்சி

சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, திடீரென வெளிநாடு ஒன்றுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு திரும்பியதும் அவர் அரசியல் ரீதியிலான முடிவொன்றை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தல்: கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்க முடிவு?

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.