மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத் திட்டம் வெளியானது – இரண்டு நாட்களே தங்கியிருப்பார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது

பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இரண்டுநாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.

அரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மகனிடம் இன்று விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இரவில் கண்மூடுகிறது மகிந்தவின் மாத்தல விமான நிலையம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மாத்தல அனைத்துலக விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படவுள்ளது.

‘இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை’ – மகிந்த பாணியில் கைவிரித்தார் ரணில்

சிறிலங்காவில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எவையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருக்மலி சிறி தர்மலோக  விஜயலோக மகாவிகாரையில், பௌத்த பிக்குகளுடன் நடத்திய உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.