மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

என்பிபி அரசின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை

தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சீனாவிடம் அவசர உதவியைக் கோரியது சிறிலங்கா

பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள், பாலங்களை மீளமைப்பதற்கு சீனாவிடம் இருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம், போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

மீண்டும் காற்றழுத்தம் – பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை

நாட்டில் இன்று முதல்  கனமழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்,  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் என்பன அறிவித்துள்ளன.

ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக,  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை  தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக  முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

என்பிபியின் வசமுள்ள கொழும்பு மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.