மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

10 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட சீனா

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் 10 முன்னணி நாடுகளின் வரிசையில் இருந்து. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.

மொட்டு சின்னத்திலேயே போட்டி – பொதுஜன பெரமுன அறிவிப்பு

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வரும் பொதுத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில், மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது.

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய உத்தரவு

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை, பிடியாணை பெற்று கைது செய்யுமாறு, சிறிலங்கா காவல்துறைக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று வெளியாகிறது தேர்தல் ஆணையத்தின் அரசிதழ்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணையத்தின் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

சில மணி நேரங்களில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கொரோனா கண்காணிப்பில் 16 பேர்

கொரோனா வைரஸ் எனப்படும், கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறிலங்காவில் 16 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவின் பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கைக்கு வந்தது கலைக்கும் அதிகாரம்

நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் 271,789 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில், 271,789 புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக, சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் – தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், 42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை, பொது நிர்வாக அமைச்சு செயற்படுத்துவதற்கு, சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணையம் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.