மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை நாடு திரும்ப உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் – துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் நாளுக்கு முன்னதாக, நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழில் தேசிய கீதத்துக்கு தடை

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இம்முறை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும், சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிணையில் விடுதலையானார் சம்பிக்க ரணவக்க

ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எம்.பிக்களைக் கைது செய்வதற்கா அரசு  ஆணை பெற்றது?- சரத் பொன்சேகா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை, அதிபர் தேர்தலில் அரசாங்கம் பெற்றிருக்கிறதா என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை ரத்துச் செய்வதற்கு சஜித் ஆதரவு

தற்போதைய அரசாங்கத்துக்கு சிறிலங்கா மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைய, எம்சிசி, அக்சா, சோபா உள்ளிட்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும், நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்சிசி மீளாய்வுக் குழு தலைவருக்கே தெரியாத ஆணை

மிலேனியம் சவால் நிறுவன (எம்.சி.சி) உடன்பாட்டை, மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு,  அதன் நோக்கம் மற்றும் அதன் ஆணையின் காலஎல்லை குறித்து இன்னமும் தெரிவிக்கப்படவில்லை, என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் சிறிலங்கா படைகளை ஈடுபடுத்தும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு

பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மெத்தை, தலையணை இல்லை – வெறும் தரையில் உறங்கும் சம்பிக்க

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளை தோற்கடித்தது சில நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்படாது மத்தல விமான நிலையம்

மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.