மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கெட்டவார்த்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ – எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.

நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் – பிரதமர் ரணில் மீது அதிருப்தி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.

மாத்தறை அணிவகுப்பில் மைத்திரி மீது கல்வீச திட்டம்?- இரு கடற்படையினர் கைது

மாத்தறையில் நேற்று முன்தினம் நடந்த போர்வீரர்கள் நினைவு அணிவகுப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மீது கல் வீசத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தில் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

செப்ரெம்பரில் புதிய நாடாளுமன்றம் – சிறிலங்கா அதிபர்

வரும் செப்ரெம்பர் மாதம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எல்லா மாகாணங்களில் படையினரை சம அளவில் நிறுத்த வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியேன்- மைத்திரி வாக்குறுதி

தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை – சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று, காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜூலையில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – ரணில் அறிவிப்பு

வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.