கொழும்பில் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
சிறிலங்கா 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சி ஒன்றை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளதுடன் இந்த வரட்சியை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவுக்கு இன்னமும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என்றும், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை எந்த நிபந்தனைகளினதும் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையில் சீனாவின் கைத்தொழில் வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அது நாட்டின் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.