மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இராணுவமய சூழலில் இருந்து 2018இல் சிறிலங்கா முற்றாக விடுபடும் – மங்கள சமரவீர

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்களவர், முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு செயலணி – சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த சிங்கள, மற்றும் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்றை உருவாக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லசந்த படுகொலை – சந்தேக நபர்களின் படங்களை மீண்டும் வெளியிட்டது சிறிலங்கா காவல்துறை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜோர்ஜ் மாஸ்டர்

விடுதலைப் புலிகள் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜோர்ஸ் மாஸ்டருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனராக இன்று பொறுப்பேற்கிறார் இந்திரஜித் குமாரசுவாமி

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று பதவியேற்கவுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படவுள்ளது.

டாக்காவில் பணயம் வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்பு

டாக்காவில் விடுதி ஒன்றில் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.

அனைத்துலகப் பங்களிப்புக்கு சிறிலங்கா அஞ்சவில்லை – மங்கள சமரவீர

பொறுப்புக்கூறலுக்கான நீதிப்பொறிமுறை விடயத்தில்  அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அஞ்சவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கினால் மகிந்தவே தலைவர் – என்கிறார் விமல் வீரவன்ச

கூட்டு எதிரணியினரால், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார் என்று, தேசிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாது இந்தியா – புதுடெல்லி கொள்கை வகுப்பாளர்கள்

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீடுகளை இனி மேற்கொள்ளாது என்று, புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.