மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஐ.நா உதவிச் செயலர் சிறிலங்காவுக்கு வருகிறார்

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஹோலியாங் சூ சிறிலங்காவுக்கு இந்தவாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை – ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி

சிறிலங்காவுக்கான வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும், வரிச்சலுகைகளை மீள வழங்குவது குறித்தும், ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான மீள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெவிட் டலி தெரிவித்துள்ளார்.

கால் நூற்றாண்டுக்குப் பின் தலைமன்னார் – கொழும்பு தொடருந்துச் சேவை இன்று ஆரம்பம்

கால் நூற்றாண்டுக்குப் பின்னர், சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான நேரடி தொடருந்துச் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

திருமலை கடற்பரப்பில் இந்திய- சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் போர்ப்பயிற்சி

திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.

ரவிராஜ் கொலையாளிகளான சிறிலங்கா கடற்படையினர் மூவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சிறிலங்கா கடற்படையினர் மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து இறுதி முடிவு இல்லையாம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே கைதாவார் பசில் – நீதிமன்றம் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும், கைது செய்யுமாறு, கடுவெல நீதிமன்றம்  சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து திரும்பும் மைத்திரி – அடுத்து பாகிஸ்தான் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ரஸ்யக் கடற்படைக் கப்பல்கள்

ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி கிடைப்பதை தடுக்கச் சதி – முன்னாள் விமானப்படைத் தளபதி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையான, மார்ஷல் ஒவ் த எயார் பதவி, தனக்குக் கிடைப்பதை தடுப்பதற்கு சதி இடம்பெறுவதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.