மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – திட்டமிட்டபடி விவாதம் நடக்குமாம்

மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு,  திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் வரும் 20ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தொகுதிவாரி முறையிலேயே மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு

வரப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதிவாரி முறையிலேயே இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உதவ இணக்கம் இணக்கம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக மைத்திரியைத் திருப்பிவிட்டவர் பசில் ராஜபக்ச – போட்டு உடைத்தார் சதுரிக்கா

மகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று,  மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட சட்டவரைவுக்கு ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு

கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.

அறுகம்குடாவில் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் மீட்பு

அறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாயன்று ஐ.நாவில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர், தற்போது நடந்து வருகிறது.