மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் போராட்டம்

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம்

கூட்டு எதிரணியினரின் எதிர்ப்புகள், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரஅவசரமாக நிறைவேற்றப்பட்டது.

தவறு செய்து விட்டோம்- புலம்பும் கம்மன்பில

காணாமற்போனோர் பணியகத்தை அமைக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் தவறி விட்டதாக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உதவிச் செயலரும் கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவிச் செயலர், சார்ள்ஸ் எச்.றிவ்கின் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கிரிந்த துறைமுக அபிவிருத்தி ஆய்வும் சீனாவின் கையில்

அம்பாந்தோட்டையில் உள்ள கிரிந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்த சாத்திய ஆய்வு மற்றும் விரிவான வடிவமைப்பை மேற்கொள்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்கள் செவ்வாயன்று ஆரம்பம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கிடையில், வரும் செவ்வாய்க்கிழமை, பூர்வாங்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் – வசந்த பண்டார எச்சரிக்கை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் ஆபத்து உள்ளதாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார எச்சரித்துள்ளார்.

“தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட நேரிடுமோ?” – சிங்கள மக்கள் அச்சம்

எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட வேண்டிய நிலை ஏற்படுமோ என்று சிங்கள மத்தியில் அச்சம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார், மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.

மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராக உனா மக்கோலி

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராகவும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியாகவும், உனா மக்கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.