மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இந்த வாரம் தென்கொரியா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தவாரம் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தயார்- சிறிலங்கா அரசு

போரின் முடிவில் சரணடைந்த முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில், உடல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனோர் பணியகம் சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக

காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

ஓயாமடுவவில் இராணுவ ஆயுத களஞ்சியத் தொகுதி – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஓயாமடுவவில், அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, ஆயுதக் களஞ்சியத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலத்தை வழங்க சிறிலங்கா இணக்கம்

சிறப்பு பொருளாதாதர வலயத்தை உருவாக்குவதற்கு, சீனாவுக்கு 55 சதுர கி.மீ நிலப்பகுதியை சிறிலங்கா வழங்கவுள்ளதாக பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளதாக, சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 90 மில்லியன் டொலர் சலுகைக்கடன் வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவின் அபிவிருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜப்பானிய அரசாங்கம் 90 மில்லியன் டொலர் (13 பில்லியன் ரூபா) சலுகைக்கடனை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

சரிகிறது சிறிலங்காவின் ஏற்றுமதி வருவாய் – தூக்கி நிறுத்துகிறது சுற்றுலாத்துறை

சிறிலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த அணியின் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவு – பதற்றத்தை தணிக்க கடும் பாதுகாப்பு

சிறிலங்கா அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் பாதயாத்திரை இன்று கொழும்பில் நிறைவடையவுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து தேசிய நீரியல் வளப் பண்ணைத் திட்டம் மாற்றப்படுகிறது

மட்டக்களப்பில் 4000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருந்த தேசிய நீரியல்வளப் பண்ணை, பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளால், வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

இந்திய உதவியுடன் நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்காவில் ஆரம்பம்

இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும், நோயாளர் காவு வண்டிச் சேவையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.