மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஆரம்பித்து வைப்பு – காலை வாரிய சஜித்

சிறிலங்காவில் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் வீதியை திறக்க முடியாது – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

வவுனியாவில், மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியைக் குறி வைக்கிறது சீனா

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

ஆழ்கடலில் செயலிழந்த கப்பலின் 14 மாலுமிகளும் மீட்பு

சிறிலங்காவிற்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து தத்தளித்த  இன்டர்கிரிட்டி  ஸ்டார் ( INTEGRITY STAR) என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை சிறிலங்கா கடற்படை மீட்டுள்ளது.

உள்ளூராட்சி தலைவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறை சிறப்புத் திட்டம்

உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா  காவல்துறை மா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

புலம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 5சத வீதத்தினால் குறைந்துள்ளது.

வட, கிழக்கு தொடருந்து சேவைகள் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது

வடக்கு, கிழக்கில் இருந்து, தொடருந்து சேவைகள் மூலம் அரசாங்கம் கணிசமான வருவாயைப் பெறுவதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் ஒரே மாதத்தில் 0.6 சதவீதத்தினால் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டினால் (NCPI) அளவிடப்படும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மின்கட்டண உயர்வு கோரிக்கையை நிராகரித்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

சிறிலங்கா மின்சார சபை முன்மொழிந்த 6.8 சதவீத கட்டண அதிகரிப்பு முன்மொழிவை சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதி

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதிபூண்டுள்ளதாக  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.