மின்சாரம், எரிபொருள் விநியோகம், போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
நாட்டைப் பாதிக்கும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதையும், சாதாரண பொது வாழ்க்கையைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
