மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

208 ஈரானிய மாலுமிகளும் போர்க்கப்பலில் இருந்து மீட்பு

ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

விழிப்புடன் இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

சிறிலங்காவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ‘விழிப்புடன்’ இருக்குமாறும், பிந்திய பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற, ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவு செய்யுமாறும் சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கான ஏற்றுமதிகள் தடைப்படும் ஆபத்து

மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அமைதியாக இருக்கக் கூடாது- ஈரானிய தூதுவர்

அனைத்துலக சட்ட மீறல்கள் குறித்து சிறிலங்கா அமைதியாக இருக்கக் கூடாது என சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஸ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு

பொது அவசரகால நிலையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.  பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு,  சிறிலங்கா அதிபரின்  செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதியா?

சிறிலங்கா வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, சிறிலங்கா விமானப்படை  நிராகரித்துள்ளது.

குமார ஜெயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தயாரிக்க உத்தரவு

சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கைது கோட்டா தான்- அடித்துச் சொல்கிறார் வீரவன்ச

அடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை  கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பின்லாந்துடன் அரசியல் ஆலோசனை பொறிமுறையை உருவாக்கும் சிறிலங்கா

ஹெல்சின்கியில் நடந்த இரண்டாவது சுற்று இருதரப்பு கலந்துரையாடலின் போது, ​​அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.

ஜெர்மனி, ருமேனியாவுக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத்  இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.