முன்னாள் அதிபர்களை நிதி திரட்டலில் ஈடுபடுத்த அரசாங்கம் மறுப்பு
பேரிடர் நிவாரண நிதி திரட்டும் முயற்சிகளில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அதிபர்களை அரசாங்கம் ஈடுபடுத்தாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனைத்துலக உதவிக்கான கோரிக்கை முயற்சிகளில், முன்னாள் அதிபர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய நிர்வாகத்தின் மீது பொதுமக்களும் சர்வதேச சமூகமும் வைத்திருக்கும் நம்பிக்கையிலேயே, சிறிலங்காவின் மீட்சிக்கு ஆதரவு கிடைத்து வருகிறது.
இவ்வாறான நிலையில் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த தலைவர்களை ஈடுபடுத்துவது புத்திசாலித்தனம் அல்ல.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைவர்களை பேரிடர் நிவாரண நிதி திரட்டும் செயல்பாட்டில் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது
இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே பொதுமக்களும் சர்வதேச சமூகமும் எங்களுக்கு உதவ முன்வர வந்துள்ளதற்கு முக்கிய காரணம் என்றும் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
