மேலும்

கொழும்பில் சிறுபான்மை வேட்பாளர்களை ஓரம்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

colombo-upfa-nomination (1)கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் தலைமையில் 22 வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும், ஒரு தமி ழ் வேட்பாளருமே இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்ற நிலையில், சிங்கள பௌத்த வாக்குகளைக் குறிவைத்தே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

colombo-upfa-nomination (1)colombo-upfa-nomination (2)

அதேவேளை, 3 முஸ்லிம் வேட்பாளர்களையும், 2 தமிழ் வேட்பாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள்

  1. சுசில் பிரேம்ஜெயந்த
  2. தினேஷ் குணவர்த்த
  3. விமல் வீரவன்ச
  4. பந்துல குணவர்த்ன
  5. மோகன் லால் கிரேரோ
  6. காமினி லொக்குகே
  7. திலங்க சுமதிபால
  8. கீதாஞ்சன குணவர்த்தன
  9. ரோகித போகொல்லாகம
  10. சந்தன கத்ரியாராச்சி
  11. ஜனக வெலிவட்ட
  12. காந்தி கொடிகார
  13. தனசிறி அமரதுங்க
  14. மால்சா குமாரதுங்க
  15.  பிரசன்ன விமல்
  16.  ஜகத் குமார
  17.  விஜிர மாபலகம
  18.  எம்.அல்மெய்டா
  19. நல்லையா குமரகுருபரன்
  20.  உதய கம்மன்பில
  21.  ஹமீட் மொஹமட்
  22. ஜயந்த கேத்தாகொட

ஐக்கிய தேசியக் கட்சி

  1.  ரணில் விக்கிரமசிங்க
  2.  ரவி கருணாநாயக்க
  3.  விஜேதாச ராஜபக்ச
  4. ஹர்ஷ டீ சில்வா
  5. ரோசி சேனநாயக்க
  6. எரான் விக்கிரமரத்ன
  7. சுஜீவ சேனசிங்க
  8. மஞ்சு சிறி அரங்கல
  9. நிரோசன் பாதுக்க
  10. முஜிபார் ரஹ்மான்
  11. எஸ்.எம்.மரிகார்
  12. உபுல் சாந்த சன்னஸ்கல
  13.  உதார ரத்நாயக்க
  14.  ஜெயந்த டீ சில்வா
  15.  சுனேத்ரா ரணசிங்க
  16. சிறிநாத் பெரேரா
  17. லியனாட் கருணாரத்ன
  18. மனோ கணேசன்
  19. எஸ்.குகவரதன்
  20. பெரோசா முஸமில்
  21. ஹிருணிகா பிரேமசந்திர
  22. பாட்டலி சம்பிக்க ரணவக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *