மகிந்தவுக்கு இடமளிக்கப்பட்டது சந்திரிகாவுக்குத் தெரியாதாம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னேஸ்வரத்தில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சந்திரிகா குமாரதுங்கவின் இந்தக் கருத்து தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தொடர்பு இல்லை. எனவே அவர் இதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று பதிலளித்துள்ளார்.