மேலும்

‘றோகண விஜேவீரவின் வாக்குமூலம்’ நூல் வெளியாகிறது

உதேனி சமன் குமார தொகுத்த ‘றோகண விஜேவீரவின் வாக்குமூலம்’ (Rohana Wijeweera’s Statement) என்ற நூல், கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு 7-இல் உள்ள மகாவலி நிலையத்தில் வரும் 25ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

1971ஆம் ஆண்டு ஜூலை மாதம், யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ​​ஜேவிபி நிறுவுநரான றோகண விஜேவீரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது பெறப்பட்ட வாக்குமூலமே இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

55 ஆண்டுகளுக்கு முன்னர், 27 வயதான றோகண விஜேவீர, சிறிலங்காவின்  சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் முன்வைத்த கருத்துகளைக் கொண்ட இந்த வாக்குமூலம், இந்த நூல் மூலம் முதன்முறையாகப் பொதுவெளியில் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *