மேலும்

ராஜ் சோமதேவவின் அறிக்கை, உருவபொம்மையை எரித்து செம்மணியில் போராட்டம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் அவரது உருவ பொம்மையை எரித்து,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகில் இன்று காலை ஆரம்பமான  பேரணி,  செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள சித்துபாத்தி மயானம் வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் , தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் அவரது உருவ பொம்மை என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *