திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி
திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை அமைத்தவரின் வர்த்தக நிலையம் நிர்வாக சபையினரால் 7 மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது .
இது தொடர்பாக, குறித்த நபர் நிர்வாக சபைக்கு எதிராக சிறிலங்கா காவல்துறையிலும், தொல்பொருள் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.
சிறிலங்கா காவல்துறையினர் இந்த விவகாரம் தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது .
தொல்பொருள் திணைக்களம் ஆலய பகுதியில் வர்த்தக நிலையம் அமைக்க தாம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் அதனை அமைக்க நிர்வாக சபையினர் மின்பிறப்பாக்கி வைத்துள்ள பகுதியை வழங்கும்படி கடிதம் நவம்பர் 7ஆம் திகதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆலய வளாகத்தில் கண்டாமணி பொருத்த ஒரு மணிக்கோபுரம் அமைக்க நிர்வாகசபை அனுமதி கேட்டும் தொல்பொருள் திணைக்களம் அனுமதியளிக்காத நிலையில்,
நிர்வாக சபை மின்பிறப்பாக்கிக்கு கூரை அமைக்க விண்ணப்பித்தும் அனுமதி வழங்காத நிலையில்,
இடிந்து விழும் நிலையிலுள்ள கோணேஸ்வர வாகன தரிப்பிடத்தை செப்பனிட அனுமதி கேட்டும் அதற்கு அனுமதிக்கப்படாத நிலையில்,
ஆலய பூசகரின் தங்குமிடத்தை சிறிது விரிவுபடுத்துவதற்கு அனுமதி தரப்படாத நிலையில்,
தனிப்பட்ட நபர் கோயில் வளாகத்தில் கட்டடம் அமைக்க தொல் பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறித்து ஆலய பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

