10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருமானம், 186.1 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
ஜனவரி-ஒக்டோபர் காலகட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த மொத்த வருமானம், 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை 1,972,957 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா 443,622 பார்வையாளர்களுடன் மிகப்பெரிய மூல சந்தையாகத் தொடர்ந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து பிரித்தானியா 180,592, ரஷ்யா 144,308, ஜெர்மனி 123,053 மற்றும் சீனா 115,400 வருகைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
