ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுளள்து.
இதன்போது இந்திய – சிறிலங்கா கூட்டாண்மையின் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா மற்றும் இந்திய மக்களின் பரஸ்பர செழிப்புக்கான நெருக்கமான பொருளாதார உறவுகளின் வரம்பற்ற திறன்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்குள் ஜேவிபி தலைமையகத்திற்கு இந்தியத் தூதுவர் சென்று ரில்வின் சில்வாவைச் சந்தித்திருப்பது இது இரண்டாவது முறையாகும்.