செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்- செம்மணியில் அமைந்துள்ள வரவேற்பு வளைவு அருகே இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த போராட்டத்தை வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
படங்கள் – முகநூல் ( செல்வா)