மேலும்

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு

pambanதலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர், லக்ஸ்மன் கிரியலெ்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த திட்டத்துக்கு சிறிலங்கா இணக்கம் தெரிவிக்காது என்று குறிப்பிட்டார்.

“இதனை நாம் எதிர்க்கிறோம். ஏனென்றால், இதனை சிறிலங்கா மக்கள் எதிர்க்கின்றனர். தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு”

  1. ரவி/சுவிஸ் says:

    மிக சரியான பதிலை அமைச்சர் கூறி உள்ளார் , இதனை நானும் வரவேற்கின்றேன், இந்தியர்கள் வேண்டுமானால் இலங்கைக்கு விமானம் கப்பல் முலம் வரலாமே ஒழிய, வீதிகளால் வர அனுமதிக்க முடியாது, இந்தியாவோ சீனாவோ அல்லது மேற்கு நாடுகளோ இலங்கையை சர்வதேச வலைக்குள் இழுக்கலாம், அதற்கு இலங்கை அகப்படக்கூடாது, என்பதே இலங்கை மக்களின் விருப்பம்,================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *