நாமலின் தனிப்பட்ட செயலாளர் வீட்டில் சிக்கிய பாதுகாப்பு பெட்டகம்
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்கவை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கைது செய்துள்ளது.
கல்கிசையில் உள்ள சஞ்சய சமரசிங்கவின் இல்லத்தில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, ஒரு பாதுகாப்புப் பெட்டகம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, அதிகாரிகள் குறித்த இடத்தில் சோதனை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், அந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
சஞ்சய சமரசிங்கவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை நேற்று கைது செய்தது.
