மேலும்

சொந்தப் பொருளாதார அபிலாசையில் அக்கறை கொள்ள வேண்டும்

பரந்த பிராந்தியப் பாதுகாப்பு அக்கறைகளிலிருந்து தனது சொந்தப் பொருளாதார முன்னுரிமைகளை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்கு  சிறிலங்கா யதார்த்தமாக இருக்க வேண்டும் என, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று  பட்டுப்பாதை முன்னெடுப்பு சிறிலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிறிலங்காவும் பட்டுப்பாதை முன்னெடுப்பும்’ குறித்த 2026 இளங்கலை கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

உறுப்பு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையின்மையே தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SARRC) முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருந்து, அந்த பிராந்தியக் கூட்டமைப்பு அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துவதைத் தடுத்துள்ளது.

“சார்க் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் (SAPTA) கையெழுத்திடப்படுவதற்கு வழிவகுத்த பிராந்திய ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையின்மை மேலும் முன்னேற்றத்தைத் தடுத்ததால் அந்த வேகம் படிப்படியாக மங்கிவிட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடர்ச்சியான போட்டி, வலுவான பிராந்திய உறவுகளை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளின் மீது ஒரு நீண்ட நிழலைத் தொடர்ந்து வீசுகிறது.

நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கைக் குறைபாடு, போதுமான கடல்சார் உள்கட்டமைப்பு இல்லாமை, மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மையங்களுடனான மோசமான இணைப்பு ஆகியவற்றை பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான முக்கியத் தடைகளாக உள்ளன.

ஆழமாக வேரூன்றிய இந்தத் தடைகள் களையப்படாவிட்டால், தெற்காசியா அர்த்தமுள்ள பொருளாதார ஒருங்கிணைப்பை அடைவதில் தொடர்ந்து போராடும், அதன் மகத்தான பொருளாதார ஆற்றல் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் போகும்.

பிராந்தியத்தின் பொருளாதாரச் செயல்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகப் போதுமான கடல்சார் உள்கட்டமைப்பு இல்லாததை உலக வங்கி அடையாளம் கண்டுள்ளது.

பரந்த பிராந்தியப் பாதுகாப்பு அக்கறைகளிலிருந்து தனது சொந்தப் பொருளாதார முன்னுரிமைகளை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்கு சிறிலங்கா யதார்த்தமாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் நாட்டின் அபிலாசைகளை மறைத்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிறரின் பாதுகாப்பு நலன்களை விட எமது சொந்தப் பொருளாதார அபிலாசையில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

தெளிவான, தொலைநோக்குடைய தேசிய உத்தி அவசியம்.

அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நாடு எங்கு இருக்க விரும்புகிறது என்பது குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, ‘சிறிலங்கா முதலில்’ என்ற அணுகுமுறையை  பின்பற்ற வேண்டும் என்றும் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *