மேலும்

நாள்: 2nd January 2020

ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா?

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்

இரண்டு இந்திய வங்கிகள் சிறிலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன.

தூதுவர்கள் நாடு திரும்ப இரண்டு வார காலஅவகாசம்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.