நேவி சம்பத் பிணையில் விடுதலை
கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள பிணை அனுமதியின் அடிப்படையில், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நேவி சம்பத்தை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை முடியும் வரை, சந்தேச நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிவான், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் பணித்தார்.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகளின் குழுவொன்றை நியமிக்குமாறு தலைமை நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரியிருந்தார்.
எனினும், இன்னமும் தலைமை நீதியரசர், அந்தக் குழுவை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.