வெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள்
சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், சீன தூதுவர் செங் ஷியுவானும், சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், இந்திய, சீன தூதுவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.